2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, P.W.S.K .பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே.ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் நேற்று பிற்பகல் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் வைத்தியர் கே.ஆர். கிஷான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.