தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்
அதன்படி விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய, சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினர் தேர்தல்கள் அலுவலகத்திற்கு சென்று பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 17 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதனிடையே அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எல் ஏ எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது