ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 தரப்புகளிலிருந்தும் செயலாளர்கள் முன்வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் பதவநிiலி தொடர்பில் நீதிமன்றத்தில் சில வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கட்சியின் செயலாளரை நியமிப்பது சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பான சட்டநிலைமைகள் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.