பிரித்தாணியாவில் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தாணியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அங்கு இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்திருந்தது
இந்நிலையில், பிரிட்டன் வரும் இந்தியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி பிரித்தாணியாவிற்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வன்முறை தொடர்பாக பிரதமர் கீர் ஸ்டார்மர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.