தெற்காசியாவில், முதன் முறையாக இலங்கையில் மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
Sri Lanka Sports Fiesta 2024 என்ற தொனிப்பொருளில், தேசிய அளவிலான மாபெரும் விளையாட்டு பொட்டிகளும் களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18 வரை கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில், பெரு விழாவாக முன்னனெப்பதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளமும் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளையும் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில் இந்த மாபெரும் நிகழ்விற்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Sri Lanka Sports Fiesta 2024 நிகழ்வில் பல முக்கிய அம்சமாகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவிலான கற்பந்தாட்ட கொண்டாட்டம் 16ஆம் திகதி மாலை
6.00 மணி தொடக்கம் 10.00 வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை என்பன கூட்டாக அறிவித்துள்ளன.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.