ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் நேற்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததாகவும், அதன்படி 40 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.