உலக நாடுகளிடையே குரங்கு அம்மை நோய்ப் பரவல் Mpox (monkeypox) தீவிரமடைந்து வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
ஆபிரிக்காவில் குரங்கம்மையால்இதுவரை 500க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம், நேற்றைய தினம் Mpox பரவுவதை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.
இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளதாவது” குரங்கு அம்மை தொற்று தொடர்பாக அவசரநிலை குழுவினர் என்னை சந்தித்து, தற்போதைய சூழலில் உலக சுகாதார நிலை குறித்த சில அறிவுரைகளை வழங்கினர். அதனை நான் முழுமையாக ஏற்றுக் கொண்டேன்.
உலக அளவில் பொது சுகாதாரத்தின் நிலை அபாயகரமாக உள்ளது. ஆபிரிக்க கண்டத்தின் தன்னாட்சி சுகாதார நிறுவனம் நேற்று அவசர நிலையை அறிவித்துள்ளது.
இந்த நோய் தொற்றில் மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம், பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படவுள்ளது” இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.