ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 13க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்று அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்ரிக்காவில் 2024ல் மட்டும், குரங்கு அம்மையால் இதுவரை 14,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்குப் பின்னா், மற்றொரு ஆபத்தான வைரஸ் மனிதகுலத்தைகுரங்கு அம்மைத் தொற்று அச்சுறுத்தி வருகின்றது.
இந்நிலையில்,பாகிஸ்தான், சுவீடன் நாடுகளில் முதல்முறையாக Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சுவீடனில் ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய நோய் மாறுபாட்டின் அதிகமான பதிவுகள் உறுதி செய்யப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இதனையடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வந்த Mpox நோய் பிற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை WHO அறிவித்துள்ளது.