வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது தந்தை தேடியுள்ளார்.
இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி, விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சம்பவத்தில் பத்மநாதன் டயான் எனும் 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.