வவுனியாவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டுத்தாக்குதலில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர் எனவும், அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த மூவர்செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளநிலையில் பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















