தனது கடையில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச் சாட்டில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடையின் உரிமையாளருக்கும், ஊழியருக்கும் இடையே இடம்பெற்ற தனிப்பட்ட தகராறே குறித்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் கொழும்பு -13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபர் எனவும், அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடையின் உரிமையாளரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.