இந்தியா ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதய்பூரில் 10 ஆம் வகுப்பு கல்வி கற்கும் பாடசாலை மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்கப்பட்ட மாணவனும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், உதய்ப்பூரின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு மக்கள் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.