அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இன்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதையடுத்தே ஜனநாயக கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
மேலும் இந்த மாநாட்டில் 50 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா,பில் கிளிண்டன் மற்றும் கவுரவ சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் உரையாற்றவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.