தனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எமது ஆட்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம். குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தை ஒரே இடத்தில் இயங்கும் நிலையமாக மாற்றவுள்ளோம்.
நாட்டில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு விரைவான அங்கீகாரம் வழங்கவும், புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் பல தீர்மானங்களை ஏற்கனவே எடுத்துள்ளோம்.
மேலும் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் அமுல்படுத்தவுள்ளோம்.
இளைஞர் சமுதாயத்தினரின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
அத்துடன், வீடு கட்டும் கிராமங்களின் எழுச்சி என்ற புதிய திட்டத்தை
இந்த நாட்டில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.