காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உடல், உள ரீதியிலான தாக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று யாழில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஹொக்கி அணியுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை காவேரி கலா மன்றம் ஒழுங்குபடுத்தியிருந்தது.
விளையாட்டு வீரர்கள் சூழலியல் பார்வையில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதன் ஊடாக எவ்விதமாக உடல் ஆரோக்கியம் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
விசேடமாக தொழுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விருந்தினர்கள், துறைசார் வைத்திய நிபுணர்கள், தொழுநோயாளர் மறு வாழ்வுக்கான சங்கத்தினர், காவேரி கலா மன்றத்தினர், யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி அணியினர் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.