முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைளில் 52 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற இடத்திற்கு முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான எவ்வித உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.