பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட, நாரம்மினிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனி, நாரம்மினிய வீதியில் வசிக்கும் 39 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக சிலர் இந்த நபரை தாக்கி கொலை செய்துள்ளனர் என்று விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குறித்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.