ஜனாதிபதி தேர்தல் முடிந்து இருபத்தி ஒரு நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நிதி, பொருள் அல்லது கடன் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் சேர்த்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தேர்தல் பிரசார செலவு வரம்பை மீறும் அளவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.