”உள்நாட்டு யுத்தத்தினை வெற்றிகொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று தீர்வு வழங்கியது, போன்று பொருளாதார நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவினாலேயே தீர்வு காண முடிந்தது” என நாடாளுமன்ற உறுப்பினர் அநுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”எதிர்த்தரப்பினர் தேர்தல் தோல்வியை கண்டு அஞ்சியுள்ளனர். எதிர்த்தரப்பினர் பலர் இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இதுவரை 12 பேர் இணைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக இந்த நாட்டில் அரசியல் செய்யவில்லை. நாட்டுமக்கன் தொடர்பாகவே சிந்தித்து பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்.
நாடு பொருளாதார ரீதியில் மிகவும் ஒரு பின்தங்கிய நிலையில் காணப்பட்டது.மக்கள் வீதிக்கு இறங்கி போராடினர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது.
அதன் பின்னணியில் செயற்பட்டதுமக்கள் விடுதலை முன்னணியே. நாடு முதலீடுகளை இழந்தது. நாட்டிற்கு எந்தவருமானமும் இல்லாமல் இருந்தது. ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்று நாட்டில் கட்டம் கட்டமாக சுமூக நிலையை ஏற்படுத்தினார்.
நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார். நாட்டில் இன்று நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஒரு நிலையையும் ஏற்படுத்தினார். நாட்டில் இன்று தேர்தல் ஒன்று இடம்பெறக்கூடிய வகையில் சூழ்நிலையையும் ஏற்படுத்தினார்.
நெருக்கடியின் போது நாட்டை பொறுப்பேற்க தவறியவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி இந்த நாட்டில் ஆட்சி செய்த 2 வருட காலப்பகுதியில அரச துறை தனியார்துறையினர் விவசாயத்துறை கல்வித்துறை சுகாதாரத்துறை என அனைத்திலும் காணப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்தார்.
வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். பணவீக்கம் நாட்டில் அதிகரித்து காணப்பட்டது.நெருக்கடியை கண்டு அனைவரும் அஞ்சினார்கள்.
தனியாக நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி இன்று அதில் வெற்றிகண்டுள்ளார். உள்நாட்டு உள்நாட்டு யுத்தத்தினை வெற்றிகொண்டு யுத்தத்திற்கு அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு வழங்கியது போன்று பொருளாதார நெருக்கடிக்கு ரணில்விக்ரமசிங்கவினாலேயே தீர்வு காண முடிந்தது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அநுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.