ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவது தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று கையொப்பமிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிய தலதா அத்துகோரளவை நியமிக்குமாறு கட்சியின் பெரும்பான்மையான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இது வரையில் தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் எழுப்பிய கேள்விக்கு உத்தியோகபூர்வமான கடிதம் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.