தெற்கு எல்லையினுாடாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு எதிராகக் கடினமான அணுகுமுறையினை மேற்கொள்ளவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எல்லை குடிவரவு சட்டத்தை மாற்றுவதற்குத் தேவை ஏற்படுமாயின் அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைபவர்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.