2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மரணங்கள் ஜப்பானில் அதிகரித்து வரும் தனிமைப் பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும், பல முதியோர் கவனிப்பாரின்றி தமது இறுதிக் காலத்தை தனிமையில் கழித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண,அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.