”பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக, தம்பட்டம் அடிக்கின்ற அரசாங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கபோவதாக தெரிவித்தும் இதுவரை அதனை அரசாங்கம் வழங்கவில்லை.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் இன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம் என பொய்யான வாக்குறுதியை வழங்கியுள்ளது.
எனவே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாதவர்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் உடனடியாக வழங்கவேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் அது முடியாவிட்டால் அரச சேவையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் என்பதில் எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும்” இவ்வாறு சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.