உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் , குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த இந்த மூன்று மாடி கட்டடம் 4 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் இதில் மோட்டார் வாகனம் திருத்துமிடமாகவும், மருத்துகள் சேமிக்கும் குடோனாகவும் இயங்கி வந்துள்ளது.
இதேவேளை, கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்படத்தக்கது.