நைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.