இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று ஐக்கிய மக்கள் சக்தியும், ஜேவிபியும் தேர்தலில் வெற்றி உறுதி என்று சொல்லில்கொண்டு திரிந்தனர். ஆனால் தபால்மூல வாக்குகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக வந்துள்ளதால் அமைதியாகியுள்ளனர்.
இன்று அவர்களிடம் சிறந்த அணி உள்ளதென கூறுகிறார்கள். நல்ல தலைவர் இல்லாத அணியால் எவ்வாறு சிறந்த அணியை உருவாக்க முடியும். அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை தேர்தல் விஞ்ஞாபனங்களில் பதிவிட்டு அதனை மக்களுக்கு புதிதாக காண்பிக்க எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கூறி தம்பக்கம் ஈர்க்க பலரும் முயற்சிக்கலாம். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யமுடியும்” இவ்வாறு கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.