புகுஷிமாவில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்களை ஜப்பான் அரசு ஈடுபடுத்தி வருகின்றது.
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள 3 அணுமின் உலைகள் சேதமடைந்தன. இதன்காரணமாக அங்கு அணுக் கழிவுகள் தேங்கிக் காணப்படுகின்றன.
இந்நிலையில் அணுக் கழிவுகள் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை பாதுகாப்புடன் அகற்ற ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எவ்வாறாயினும் அந்த முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அங்குள்ள அணுக் கழிவுகளை அகற்றுவதற்கு ரோபோக்களை ஈடுபடுத்தும் முயற்சியில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது.
அந்தவகையில் குறித்த முயற்சி இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி 10 நாட்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இகதிர்வீச்சை கருத்தில் கொண்டு தலா 6 பேரை கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவும் 15 நிமிடம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோபோ எடுத்துவரும் மாதிரியை ஆய்வு செய்த பின்னர் தான் கழிவை அகற்றுவது எப்படி என்பது முடிவாகும் என்று ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.