குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், நவம்பர் 5 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தனது ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிஸுடனான மற்றொரு விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று வியாழக்கிழமை தெரிவித்தார்,
இவ்வாற தொடக்கத்தில் இருவருக்கு இடையில் நடைபெற்ற முதல் விவாதத்தில் டிரம்ப் தோற்கடிக்கப்பட்டதாக பல கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன.
சர்வதேச தரவுகளின்படி, விவாதம் 67.1 மில்லியன் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டாவது விவாதத்தை புறக்கணித்துள்ள ட்ரம்ப், விவாதத்திற்கு பதிலாக ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தனது கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இரு வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.