வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர பிரதேசங்களில் மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய புயலின் காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.
கனமழையில் வியட்நாமின் வடக்குப் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து நேற்று மேலும் 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.