நைஜீரியாவில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டுச் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடமேற்கு நைஜீரியாவில், ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளுக்காகத் தினந்தோறும் ஆற்றினை கடந்து சென்றுவரும் நிலையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து அந் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.