அரசாங்கத்திற்கெதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கு ஜே.வி.பியினரே வழி செய்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்தாா்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எஸ்.பி.திசாநாயக்க இதனைக் தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சை ஏற்ற காலத்திலிருந்தே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை வந்தது.
நாட்டு மக்கள் 2022 இல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வீதியில் அல்லல்பட்ட வேளையில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கும் ஜேவீபியினரே வழி செய்தனர்.
ஆனால் நாட்டை ஏற்கச் சொன்னப்போது சஜித்தும், அநுரவும் ஒளிந்துகொண்டார்கள்.
இன்று ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொண்டுள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.