ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 4,411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,032 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்தம் 4,411 புகார்களில் 3,828க்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.