ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் இன்றும்;, செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர் முதலாம் திகதிகளில் நடைபெறும் என இந்தியச் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, முதல் கட்டமாக இன்று 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன்போது அதிக சதவீத வாக்குகள் பதிவாகும் என தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.