ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்புக்காக 63 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹல்தல்துவ தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வாக்குப்பதிவு தினத்தன்று நாடாளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லியானி குணதில தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறுதிபாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ் திணைக்களம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு முப்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
வன்முறைகள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்குப்பதிவு தினத்தன்று நாடாளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
.