ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.
இதன்போது, அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.