ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.