சதொச ஊழியர் குழுவை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் சதொச தலைவர் எராஜ் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் சாட்சிய விசாரணையை ஜனவரி 21 ஆம் திகதி நடத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
2014 ஜனவரி 1 முதல் 2014 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் 39 ஊழியர்களை வழமையான கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மூன்று பிரதிவாதிகள் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது