இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆயுதமேந்திய குழுவான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுமாறு அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் போர் நிறுத்தக் கோரிக்கைக்கு அழைப்பு விடுத்த போதிலும் இஸ்ரேலிய பிரதமர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல் முடிவில் உறுதியாகவுள்ளார்.
வியாழன் (26) அன்று மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை பெய்ரூட்டின் தெற்கில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அதன் ட்ரோன் பிரிவின் தலைவரான மொஹமட் சுரூர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.