நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு, முன்னாள் எம்.பி.க்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளர் உறுப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்டவை இழக்கப்படும்.
எனினும், மதிவேல குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாள் வரை அங்கும் தங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.