லிட்ரோ கேஸ் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றினார்.
இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத் துறையில் முதல் தரப் பட்டம் பெற்றுள்ளார்.