சமூக ஊடகங்களில் தன்னுடன் நட்பாகப் பழகிய சிலர் தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி பொலிஸாரிடம் முறைபாடளித்துள்ளார்.
அவரது புகாரில், 3 பேர் தன்னை ஹிப்னாடிசம் செய்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 98,000 பணத்தை மாற்றி மோசடி செய்தாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் வினய் (24), நவீன் (24), ரோஹித் (24), ஆகாஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். அதற்கமைய, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.27,000 பணத்தை பொலிஸார் கைப்பற்றினர்.