ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் எம்.பி அலுவலகம், இது ஒரு தவறான பிரசுரம் என்றும், மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் கூறியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டியிடும் மாவட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், இது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருணாகலில் போட்டியிடுவார் என கூறுவது மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அரசியல் இலாபம் தேடுபவர்களால் இவ்வாறு செயற்படுவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.