எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியில் சிக்கல் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வேட்பு மனு கையளிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகில் மக்கள் ஒன்று கூடியிருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பேரணி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட முற்பட்டால் அதனைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.