மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் லெபனான் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் ஹஸ்புல்லாவின் புலனாய்வுத்துறை தலைமையகத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கருத்து வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
லெபனான் ராணும் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் லெபனாள் போர்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் ஈரான் இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கு எதிராக அண்மையில் ஈரான் பாரிய ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் பெய்ரூர்ட் விமான நிலையம் அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய தாக்குதுல் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதேவேளை கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2000 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.