நாட்டிற்கு சட்ட விரோதமான முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள், மதுபானப் போத்தல்கள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்த குற்றச் சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
44 வயது மதிக்கத் தக்க குறித்த நபர் நேற்றுக் காலை(09) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.