பொதுத்தேர்தலில் போட்டியிடபோவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையூடாக இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கூட்டணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடபோவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.