இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது, நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பயன்படுத்திய 06 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளுடன் கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 59 இந்திய இழுவை படகுகளையும், 434 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றி, சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.