ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘கனேமுல்ல சஞ்சீவ’ மற்றும் ‘வெலே சுதா’ ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் பல தொலைபேசி பாகங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (13) புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ பிரிவில் உள்ள விசேட பிரிவின் பல அறைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போதே குறித்த தொலைபேசிகள் மற்றும் தொலைபேசிப் பாகங்கள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.