“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் ஒருதடவை வாய்ப்பு கிடைத்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக” ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ரஞ்சன் ராமாநாயக்க, நேற்று முன்தினம் கம்பஹா மாவட்ட செயலாலர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் ஒருதடவை வாய்ப்புகிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஒலிவாங்கி சின்னத்தில் நாம் இம்முறை போட்டியிடவுள்ளோம்.
கடந்த காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் அதிகவாக்குகளினால் மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தார்கள். மக்களுக்கு என்மீது நம்பிக்கை உள்ளது “ இவ்வாறு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வேட்பாளர்கள் புத்தளம் காலி மாத்தளை கொழும்பு கேகாலை நுவரெலியா பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நேற்று முன்தினம் வேட்புமனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.