”நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட மக்கள் தனக்கு ஆதரவளிக்கவேண்டுமென” ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் கிரிக்கட் வீரர் திலகரட்ண டில்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத்தேர்தலில் களுத்துறை மாவட்டம் சார்பாக நேற்று முன்தினம் வேட்புமனுதாக்கல் செய்திருந்த டில்ஷான் அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” புதிய கட்சியாக நாம் தேர்தலில் களமிறங்கியுள்ளோம். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களையும் நாம் தாக்கல் செய்துள்ளோம்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் விரைவாக ஆரம்பிக்கவுள்ளோம். களுத்துறை மாவட்ட மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்” இவ்வாறு திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமாநாயக்க தலைமையிலான வேட்பாளர்கள் நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் வேட்புமனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.